சீனா மீண்டும் கடன் உதவி வழங்கத்தயர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சீன கடன் மற்றும் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல் மற்றும் அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்தி செயற்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மக்களின் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் பீ.சமரக்கோன், நிதி அமைச்சின செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் சீன தூதுவர் செங் சுவான் (Chang Xueyuan) உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.