தனியார் பேரூந்து கட்டணம் அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1
பேருந்து கட்டணங்களின் 4 சதவீத அதிகரிப்பு இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரவுள்ளது.
போக்குவரத்து அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
போக்குரவத்து அமைச்சர் மற்றும் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் குறைந்த பட்ச பேருந்து கட்டணமான 12 ரூபாவில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பேருந்து சேவைகள் மற்றும் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணங்களிலும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12 ரூபாய் கட்டணத்திலும், 15 ரூபாய் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படாது.
19 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும், 24 ரூபாவாக இருந்த கட்டணம் 25 ரூபாவாக அதிகரிக்கும்.
28 ரூபாவாக இருந்த கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கும்.
அதேநேரம் தனியார் பேருந்துகளின் இந்த பயணக்கட்டண அதிகரிப்புக்கு அமைவாக, அரச பேருந்து கட்டணங்களும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.