இலங்கையின் தேல்வி இந்தியாவின் சாதனை வெற்றி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் நேற்று இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர். சுற்றுப்போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

நாணயச் சுழற்சியில்வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது

3 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் ஆசம் – சோகைப் மாலிக் ஜோடி அணியை மீட்கப் போராடியது. நிதானமாக விளையாடிய இந்த இணை 3- வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். இதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால் அந்த அணி 43.1 ஓவர்களுக்கு 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Trending Posts