தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் :இன்று முதல் ஆரம்பம்!!

செய்திகள்

இன்று  முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு அற்ற நாடு என்ற தொனிப் பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த டெங்கு ஒழிப்பு வாரம் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை அமிழில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வலயங்களில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இது தவிர 175 சுகாதார சேவைப் பிரிவுகளில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.