இன்று கிளிநொச்சியில் திலீபனின் தியாகத்தை நினைவு கூர்ந்து உண்ணாவிரதம்!!

செய்திகள்

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இன்று காலை முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்போராட்டம் திலீபன் உயிர்நீத்த நேரமான காலை 10.50 வரை முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.