யாழுக்கு இராணுவம் தேவையில்லை பொலிசார்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆவாக் குழுவினரைக் கட்டுப்படுத்த இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சட்ட ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆவாக் குழுவினை கட்டுப்படுத்த தங்களால் முடியும் என்று வடக்கு இராணுவக் கட்டளைத்தளபதி அண்மையில் கூறி இருந்தார்.

எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற சூழ்நிலை பாரதூரமானது இல்லை என்றும், காவற்துறையினரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள 53 காவற்துறைப் பிரிவுகளில், சில இடங்களில் மாத்திரமே இந்த நிலைமை இருந்துள்ளது.

இளம் வயதினர் வாள்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தும் இந்த சம்பவங்களில் இதுவரையில் யாரும் கொல்லப்படவில்லை.

எவ்வாறாயினும் தற்போது இந்த நிலைமை பாரிய அளவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்