ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹொங்கொங் அணியின் வீரர்கள் மூவர் இடைநிறுத்தம்

செய்திகள் விளையாட்டு

ஊழல் மற்றும் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹொங்கொங் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.

மொத்தமாக 19 குற்றங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு கோவையை மீறியதாக இர்பான் அஹமட், நதீம் அஹமட், ஹசீத் அம்ஜாத் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த 2015 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ணத் தெரிவுப் போட்டிகளில் மூவரும் ஊழல் மற்றும் ஆட்டநிர்ணய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.