விக்னேஸ்வரனின் அதிரடி அறிவிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது அரசியல் எதிர்காலம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் 24ம் திகதி வெளியிடவுள்ளார்.
அன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இது தற்கால சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அதன் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது சீ.வி.விக்னேஸ்வரன், இதுநாள் வரையில் வடமாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் பிரேரணைகளின் அமுலாக்கம் தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவர் புதிய கட்சி ஒன்றின் ஊடாக அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.