அரசியல் கைதிகளுக்கு தீர்வு இன்று மாலை

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்றையதினம் மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்தை அடுத்து, ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதாக கடந்த வாரம் இணங்கி இருந்தார்.