புதுக்கட்சி ஆரம்பிக்கும் விக்னேஸ்வரன்…

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவர் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாகவே இந்த புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது அரசியல் எதிர்காலம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அதுதொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் தமது கருத்தை தெரிவித்தார்.