இலங்கை அணிக்கு மீண்டும் தோல்வி

செய்திகள் விளையாட்டு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருந்த இப்போட்டி மழைக்காரணமாக தாமதமாக ஆரம்பமானது.

இரவு 8.15 மணியளவில் ஆரம்பமான போட்டி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் நிரோசன் திக்வெல்ல 36 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 35 ஓட்டங்களையும், அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷீத் 4 விக்கட்டுக்களையும், டொம் குரன் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி , 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் இயன் மோர்கன் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் அமில அபொன்சோ இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி , 5 போட்டிகளை கொண்ட இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.