இந்தியாவின் அதிக்கம் கிரிக்கேட்டில்

செய்திகள் விளையாட்டு

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 31.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவு அணி சார்பாக அதன் தலைவர் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணிசார்பாக ரவிந்திர ஜடேஜா நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தொடர் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

Trending Posts