இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

எரிபொருட்களின் விலைகள் இன்று இரவு முதல் அதிகரிக்கப்படுவதாக எரி சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி

ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவாலும்,
ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 23 ரூபாவாலும்,
ஒட்டோ டீசல் 7 ரூபாவாலும்,
சுப்பர் டீசல் 12 ரூபாவாலும்,
மண்ணெண்ணெய் 7 ரூபாவாலும் அதிகரிக்கபடவுள்ளது.

அதன்படி ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 157 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 184 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவாகவும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.