கீரிமலையில் உள்ள அரசமாளிகையும் சுமந்திரனின் உணவுப் பொட்டலமும்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட அக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெருவித்த சுமந்திரன் கீரிமலையில் உள்ள அரசமாளிகையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அந்த காணி அமைந்துள் பகுதி பொதுமக்களிற்கு சொந்தமான காணி என்றும் இது தொடர்பாக நீதிமன்றில் வளக்கு தொடரப்பட்டுள்ளதை தான் அறிந்ததாக குறிப்பிட்ட சுமந்திரன் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் இந்த செயற்பாடானது நாட்டை வெளிநாட்டுக்கு விற்பதற்கு சமனான செயற்பாடாகும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் கிளிநொச்சி பகுதியில் சில குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts