யாழில் உள்ள உள்ள ஜனாதிபதி மாளிகையை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : அம்பலப்படுத்திய சுமந்திரன்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சீன நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முடக்க நிலையில் உள்ள யாழ்.நல்லூர் அரசடி கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

கீரிமலை ராஜபக்ச மாளிகை என நாங்கள் அறிந்துகொண்டிருக்கின்ற, இந்த இடமும் விற்பனைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகின்றது.

இது நாட்டை விற்கிற அவர்களுடைய இன்றைய திசையிலே இதுவும் ஒரு பகுதி. ஆனால் எங்களைப் பொறுத்தவரையிலே இந்தக் கட்டடம் அமைக்கப்பட்ட போதே பல தனியார் காணிகள் இருந்த இடம். அது விடுவிக்கப்படவில்லை.

சுவிகரிக்கப்பட்ட காணிகளை விடுக்குமாறு வழக்குகளும் நடைபெறுகின்றன.

மைதிரிபால சிறிசேன ராஜபக்ச மாளிகை மத்திய அரசுக்கு தேவையில்லை என கூறினார்.

மைதிரிபால அவ்வாறு கூறியபோது, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைக்கு வழங்குமாறு கோரினார்.

வடக்கு மாகாண சபையில் இம்மாளிகையை மாகாண சபைக்கு வழங்குமாறு தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முயற்சிப்பதை
ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Trending Posts