எரிபொருள் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா?

சிறப்புச் செய்திகள் செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெருவித்து வருகின்றனர். ஆளும்கட்சியும் தமது எதிர்பை தெருவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெருவிக்கின்றன.

கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி, 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 20 ரூபாவினாலும், 95 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 23 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

அதேநேரம், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 7 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

எனினும், அதிகரித்த எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பு சார்பிலே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் கனிய எண்ணெய் அமைச்சில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சகல கருத்துக்களும் நாளை (14) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளதாக தெரியவருகிறது.

Trending Posts