பயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

செய்திகள் முக்கிய செய்திகள் 3

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுபாடினை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனாநோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறைவடைந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை மேலும் சில காலத்திற்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தினமும் இது தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணத்தடை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

Trending Posts