டக்ளஸ் போட்ட பஸ்ஸால் நெருப்பெடுக்கும் இந்திய மீனவர்கள்..

செய்திகள் முக்கிய செய்திகள் 3

டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு,பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான  சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்,  கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் (11.06.2021) ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டு முதலாவது தொகுதி பேரூந்துகளை காங்கேசன் துறை, துறை முகத்தில் இருந்து ஏற்றிச் சென்ற அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியில் குறித்த பேரூந்துகளை கடலின் அடியில் இறக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள்; ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெருவிக்கையில் இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான  கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு  சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர். பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும்; மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம்; காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை  இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் தெருவித்து இருந்தனர்.

இதனிடையே டக்ளசின் முயற்சியை இலங்கை மீனவர்கள் பலரும் ஆதரவுதெரிவித்து வருவதுடன் சமூகவலைத்தளங்களில் இது தொடர்பாக கருத்தும் தெருவித்து வருகின்றனர்.

இவ்வாறு பேரூந்துகளை கடலின் அடியில் இறக்கிவிடப்படுவதால் எல்லை தாண்டும் இந்திய மீீனவர்களின் இழுவை படகுகளின் மடிகளை இவை கிழித்து விடும் …கடந்த வருடங்களில் இந்திய மீனவர்கள் பெரிதும் Trawler fishing எனும் இழுவை படகுகள் கொண்டு மீன் வளத்தை அழிக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான கருத்துக்கள்….

1.இதனால் இலங்கை மீனவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை ஏனெனில் அவர்கள் சிறிய இயந்திர படகை பயன்படுத்துபவர்கள் ஆனால் இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் வரும் அண்டை நாட்டு மீனவர்களை பாதிக்கும்.

2.இலங்கையில் ரோளர்களை பயன்படுத்தி கடல் அடிமட்டம்வரை அள்ளிச்செல்லும் மீன்பிடி யாரும் செய்வதில்லை. அதனால் எங்கள் மீனவர்கள் இதனால் பாதிப்படைய போவதில்லை.

3.இனி திருட்டுதனமா இழுவை படகுகள் வலை இறக்க முடியாது

4.குஞ்சிலிருந்து பெரிய மீன்வரை வாரி அள்ளும் விசைப்படகுகள் பயன்படுத்தி சட்டவிரோத இழுவை மடி பயன்படுத்துபவர்களுக்கு தான் இது சிக்கல். இலங்கையில் அவ்வாறான மீன்பிடி நடைபெறுவது பெரும்பாலும் இல்லை.

5.இப்படிச்செய்வதால் மீன்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை ….நீங்கள் கவனித்தால், அந்த பேருந்துகளில் உள்ள சாயம் எடுக்கப்பட்டிருக்கும் ….

Trending Posts