கோறளைப்பற்று மத்தி பிரததேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பு

செய்திகள்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்த வறிய மக்களுக்கு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் வழிகாட்டலில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள வாழைச்சேனையிலுள்ள மூன்று கிராம அதிகாரி பிரிவுகள், பிறைந்துறைச்சேனையில் உள்ள இரண்டு கிராம அதிகாரி பிரிவுகள் ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 3900 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டது.

ஈஸ்ட் லங்கா பொலிஷக் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 3900 குடும்பங்களுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

Trending Posts