நாவற்குழியில் 200 கட்டிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்க நாவற்குழியில் கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில்குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது 200 கட்டிகளுடன் அமைக்கப்பட்டு இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Trending Posts