தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வுதருமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வுதருமாறு சர்வமத தலைவர்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன் போது மக்களுக்கு கொடுக்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை அதிகரித்தல், தற்போதய பயணக்கட்டுப்பாடுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளும் தடைப்படாமல் செல்லுதல், தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு கானுதல் மற்றும் விரைவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை சர்வமத தலைவர்கள் முன்வைத்தனர்.

சர்வமத தலைவர்களது குறித்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.