நாடு திரும்புகிறார் பசில்

செய்திகள்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட காரணங்களுக்காக இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள கடும் அதிருப்திக்கு மத்தியில் பசிலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Trending Posts