வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்த சம்பவம் யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரி (வயது40) என்ற ஒரு வயது குழந்தையின் தாய்,
வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பீ.சி.ஆர் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக தொியவருகின்றது.

Trending Posts