இப்ப போட்டது சின்ன பஸ் அடுத்தது பெரிய சைஸ் ரயில் பெட்டி : டக்ளஸ் அதிரடி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பேரூந்துகளையும் புகையிரதப் பெட்டிகளையும் கடலில் போடுகின்ற செயற்பாடினை இடைநிறுத்த போவதில்லை என்றும் பேருந்துக்கள் மற்றும் புகையிரத பெட்டிகளையும் கடலில் தொடர்ச்சியாக போடப்போவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் காட்டமான பதில் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாவனைக்கு உதவாத பேரூந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்த விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத பேரூந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம் தொடரந்து பழைய பேருந்துக்கள் ரயில் பெட்டிகள் கடலினுள் இடும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்;.

ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

Trending Posts