சமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக ஆராய்து பார்ப்பதற்காக 5 பேர்கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. இதன்போது  லிட்ரோ கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 600 ரூபாவினாலும் லாப் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலையை 751ரூபாவினாலும் அதிகரிக்குமாறு கோரி இருக்கின்றன.

இதில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 400 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் அதற்கு இணக்கம் இல்லாமல், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இருந்தபோதும் நாட்டின் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டமான நிலைமையில் இந்தளவு தொகை விலை அதிகரிப்பு செய்வது சாத்தியம் இல்லை.

என்றாலும் இதுதொடர்பான நிபுணர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் கேஸ்விலை திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  அமைச்சரவை உபகுழு தெரிவித்துள்ளது.

எவ்வாறு இருந்தபோதும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அமைச்சரவை உபகுழுவின் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கம் இல்லாமலேயே முடிவுற்றிருக்கின்றது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Trending Posts