பொசொன் விழாவினை கொண்டாடுவதற்கு அரசு மும்முரம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அரச பொசொன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) பிற்பகல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மிஹிந்தலை புனித பூமியில் நடைபெறும் அரச பொசொன் விழா தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்முறை அரச பொசொன் விழாவை முன்னிட்டு பிரதான நிகழ்வு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம ரஜ மஹா விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும்.அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.