அபாய கட்டத்தை தாண்டவில்லை! யாழ். மக்களே! மிக அவதானம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் முழுமையாக நீங்கவில்லை, எனவே மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என இன்று நடந்த ஊடகவியளாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது வந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்று 83ஆக அதிகரித்திருக்கின்றது. அதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 4668 ஆக உயர்வடைந்து இருக்கின்றது மேலும் மொத்தமாக நேற்றுடன் 63 உயிரிழப்புக்கள் ஏற்பட்டு உள்ளது. சுமார் ஆயிரத்து 754 குடும்பங்களைச் சேர்ந்த 5613 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.

இதனைவிட கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 பேரும் வட்டுக்கோட்டை பராமரிப்பு நிலையத்தில் 159 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனைவிட சண்டிலிப்பாயில் இரண்டு கிராம பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது அதேபோன்று நல்லூரில் இருந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதி தற்போது விடுவிக்ப்பட்டுள்ளது. இந்த நிலையிலே அரசாங்கம் எதிர்வரும் 21ஆம் திகதி இந்த பயணத்தடை தளர்வை அறிவித்து இருக்கின்றது ஆனால் இந்த பயணத்தடையின் போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் தடைசெய்யபட்டிருக்கும். மக்கள் தேவையான அவசிய பயணங்களை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் அந்த கொரோனா நிலைமையானது நாளாந்தம் கிடைகின்ற பரிசோதனை தரவுகளின் அடிப்படையில் இன்னும் ஒரு அபாய கட்டத்தை நீங்கியதாக கருத முடியாது ஆகவே மக்களை மிகவும் அவதானமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் என அவர் மேலும் தெருவித்தார்

Trending Posts