“யாழில் 71,712 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு”

செய்திகள்

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 5000ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இதன்படி நேற்றைய தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.


மொத்தம்1754 குடும்பங்களைச் சேர்ந்த 5613 நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாகவும்
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Trending Posts