சாவகச்சேரியில் கசிப்பு காய்ச்சியவர் பிடிபட்டார்

செய்திகள்

நடைமுறையில் உள்ள பயணத் தடை காலத்தில், மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் பல நாட்களாக சாவகச்சேரி – சரசாலை,குருவிக்காடுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபரை மதுவரி திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு அடங்கலாக கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Trending Posts