பயணத்தடை மத்தியிலும் ஓட்டமாவடி பகுதி வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன

செய்திகள்

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள போதும் ஜனாதிபதியின் வழிகாட்டலில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கிராமிய வீதிகள் மற்றும் வடிகாண் அமைக்கும் பணிகள் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை படசாலை வீதியில் வடிகாண் அமைக்கும் வேலைத் திட்டம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 15.75 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் காவத்தமுனை படசாலை வீதியில் 75 மீற்றர் அளவுடைய வடிகாண் அமைக்கும் பணிகள் பயணத்தடை காலத்திலும் இடம்பெற்று வருகின்றது.

Trending Posts