மட்டக்களப்பில் கரையொதுங்கும் டொல்பின்களும் அரிய வகை ஆமைகளும்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மட்டக்களப்பு- கிரான்குளம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் ஒரு டொல்பின் மீன் ஆகியன கரையொதிங்கியுள்ளன. குறித்த பகுதியில் மேலும் பல ஆமைகள் கரையை நோக்கி வருவதாகவும் அங்குள்ள மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கரையொதுங்கிய டொல்பின் மற்றும் கடலாமைகள் ஆகியவற்றை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.

அண்மைக்காலமாக இதுவரை 40க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 5 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts