சாராவை தேடும் இலங்கை புலனாய்வு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை. சாரா உயிருடன் உள்ளார் என கூறப்பட்ட சாட்சியங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் சாரா தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இது குறித்து இரண்டு தடவைகள் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீண்டும் ஒரு தடவை தோண்டி மரபணு பரிசோதனை மேற்கொள்ள சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

சாரா உயிர் வாழ்கிறார் என்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. அத்துடன் சஹ்ரானின் மனைவியான ஹாதியாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Trending Posts