ஓட்டமாவடி மக்களிற்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

செய்திகள்

கொரோனா கால பிரயாணத்தடை காரணமாக எல்லைப்புறத்தில் வாழும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அன்றாட ஜீவனோபாயத்திற்கு பெரும் கஸ்டத்திலுள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மஜ்மா நகர் மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அன்றாட ஜீவனோபாயத்திற்கு பெரும் கஸ்டத்திலுள்ளமையினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் பிரதியமைச்சர் உசைன் பைலா மற்றும் குடும்பத்தினரால் மேமன் எய்ட் பவுண்டேசன் ஊடாக 2,600 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் மஜ்மா நகரிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அல் மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர், முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், கல்குடா இளைஞர் அமைப்பின் தலைவர் எம்.ஜௌபர், மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம், பள்ளிவாயல் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கான நிதியுதவியை வழங்கிய உசைன் பைலா குடும்பத்தினருக்கும், இதனை ஏற்பாடு செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பிரதேச மக்கள் சார்பாக அல் மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றார்.

Trending Posts