டெல்டா வைரஸ் தொடர்பில் பொதுச்சுகாதார சங்கத்தலைவர் எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தெமடகொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு மிகவும் ஆபத்தானது இந்த வைரஸ் ஆனது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இந்த வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்ட பகுதி சனநெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். அங்குள்ளவர்களில் அதிகமானோர் சுத்திகரிப்பு பணியாளர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் திரிபு நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

குறிப்பாக மேல் மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts