மன்னாரில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கிலம் மீட்ப்பு

செய்திகள்

மன்னார்- கரடிக்குளி கடற்கரையில் எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்று சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்தத்திற்கு பின்னரே மன்னார் கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த கப்பலின் இரசாயன கழிவுகளினால் தங்களது வாழ்வாதாரமும் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் எரி காயங்களுடன் திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளமையினால் அப்பகுதி மீனவர்கள் மேலும் அச்சமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.