நாளை பேருந்துகளும் தொடருந்துகளும் இயங்கும்

செய்திகள்

நாளை பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் 6 தொடருந்துகளும், கரையோர மற்றும் களனிவெளி மார்க்கங்களில் தலா 4 தொடருந்துகளும், புத்தளம் மார்க்கத்தில் 3 தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் தனியார் பேருந்துகளும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Trending Posts