மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

செய்திகள்

மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையால், எதிர்வரும் 21 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றபோது, சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending Posts