இலங்கை மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொடுத்த கடன் எவ்வளவு தெரியுமா?

செய்திகள்

இலங்கை மின்சார சபை, நிலுவையிலுள்ள 8,000 கோடி ரூபா கடனை செலுத்தி எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

2019 மார்ச் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பெற்றுக்கொண்ட எரிபொருளுக்காக இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், இலங்கை மின்சார சபைக்கு மின்னுற்பத்திக்கான செலவு குறைவடைந்துள்ளது எனவே இந்த காலகட்டத்தில் இந்த கடனை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Trending Posts