முழந்தாளிடச் செய்த இராணுவத்தினருக்கு இடம்மாற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

மட்டக்களப்பு – ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பயணத் தடையை மீறியமைக்காக பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் நேற்று முழந்தாளிட வைத்தமை தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Trending Posts