பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்..

சிறப்புச் செய்திகள் செய்திகள்

நாளை (21) அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே எதிர்வரும் நாட்களிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

அலுவலகங்களில் பணிபுரிவதற்கு குறைந்தளவானோரையே சேவைக்கு அழைக்க வேண்டும்

வீடுகளிலிருந்து Online ஊடாக பணிபுரிவோர் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதற்கு நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள், முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமாகும்

மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில், தகுந்த காரணத்திற்காக மாத்திரம் மாகாணத்திற்குள் பயணிக்க முடியம்சுற்றுலாப் பயணங்கள், யாத்திரை செல்லல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை

ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Posts