2,500 கடந்த கொரோனா மரணங்கள் 1.07 சதவீதத்தால் அதிகரிப்பு

செய்திகள்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,500 ஐ கடந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 54 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற 54 மரணங்களில் 31 ஆண்களினதும், 23 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

30 வயதிற்கும் குறைந்த பெண் ஒருவரினதும், ஆண் ஒருவரினதும் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 6 பெண்களும், 5 ஆண்களும் மரணித்துள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 18 பெண்களும், 25 ஆண்களும் கொரோனா தொற்றால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் கொரோனா மரணங்களின் சதவீதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொரோனா தரவு தரளத்தின் தரவுகளின் படி, நாட்டில் கொவிட் மரணங்கள் சதவீதம் 1.07 ஆக அதிகரித்துள்ளது.

Trending Posts