பயணத்தடை தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாளை பயணத்தடை தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில்..

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பயணக்கட்டுப்பாட்டை நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை கவலை அளிப்பதாக அந்த சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அத்துடன், நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் சராசரியாக 50ஆக உள்ளது.

எனவே, இப்படியான நிலைமையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றமையானது கவலை அளிப்பதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Trending Posts