திருத்தப்பட்ட அறிவிப்பு பயணத்தடை தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும்.

பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும. பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது

எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.

சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், சாராயக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும்.

சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும். மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது.

அதன்படி வீட்டிலிருந்து இருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும்.

மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் பொது போக்குவரத்து சேவைகளில் 50 சதவீதமானோர் பயணிக்க முடியும்.

எனினும் மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் வாடகை வாகனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.

அரச மற்றும் தனியார் சேவை நிலையங்களுக்கு தேவையான அளவு சேவையாளர்களை அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானித்து இணைக்க வேண்டும்.

அத்துடன் வீடுகளில் இருந்து சேவையாற்ற கூடிய வகையிலும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் நிறுவனங்களின் கூட்டங்களில் 10 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.

மேல் மாகாணம் தவிர்ந்த பகுதிகளில் 25 பேருடன் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்தில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் உயிர் குமிழி முறைமை பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.

தேவையான பணியாளர்கள் மாத்திரமே நிதி நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும்

மொத்த விற்பனைகளுக்காக பொருளாதார மத்திய நிலையங்களும், கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாராந்த சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்ட நடமாடும் வர்த்தகர்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.