கட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இன்று

செய்திகள்

நாளையும் நாளைமறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டளை சட்டங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

Trending Posts