எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திகள்

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் தமது வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்து கொழும்பு,மோதரை- வெல்லம பகுதிவாழ் மீனவர்கள் குழுவொன்று நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கொழும்பு-மோதரை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட உள்ளிட்ட ஒரு குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கும் குறித்த குழுவினருக்கும் இடையே ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது நடமாட்ட தடையை மீறியமைக்காக இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

Trending Posts