இளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது

செய்திகள்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உள்பட்ட திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சில்லாலையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் இளவாலை பொலிஸார் கூறினர்.

Trending Posts