அதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்

செய்திகள்

யாழில் அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

நாடு பூராகவும் அமுல்ப்படுத்தப்பட்ட பயணத்தடை சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நபர் ஒருவர் கொள்வனவு செய்து எடுத்துச்செல்லும் அளவுக்கு அதிகமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts