கிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

பயணக் கட்டுப்பாடுகள் இன்று திங்கள்கிழமை அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை வாழைச்சேனை, ஓட்டமாவடி, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் அவதானிக்க முடிந்தது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் பொது மக்களின் நடமாட்டம் கடைத்தெருக்களில் அதிகரித்தே காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பகுதியில் பொது சந்தை, வர்த்தக நிலையங்கள், மதுபானசாலை, வங்கிகள் என்பற்றில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்தினால் வாழைச்சேனை பொது சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகளும் இடம் பெற்றன.

மக்கள் நீண்ட நாட்களின் பின்னர் வெளியாகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததை பெருநாள் அல்லது திருவிழா போன்றே நினைத்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறித் திரிவதை அவதானிக்க முடிகின்றது.

Trending Posts