இந்திய டெல்டா கொரோனா சந்தேகத்தில் பெண் ஒருவர் ஐடிஎச் இல் அனுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இந்திய டெல்டா திரிபு தொற்று உறுதியானதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் தற்போது தொற்றுநோய் நிறுவகத்தில் (ஐடிஎச்) இன்று சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்

மாதிவெலவிலை சேர்ந்த குறித்த நபருக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிறியளவான வித்தியாசம் தென்பட்டதால் அதுதொடர்பான மேலதிக பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது, மாதிவெல பிரதேசத்தில் அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அப்பகுதியில் தொடர்ந்தும் கொவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பரிசோதனைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் தினங்களில் கிடைக்கபெறவுள்ள நிலையில், அதன்பின்னர் அந்த அறிக்கையை வெளியிடுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Trending Posts