லஞ்ச் ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை

செய்திகள்

லஞ்ச் ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய உலக நாடுகள் லன்ச்ஷீட்களை பயன்படுத்துவதில்லை என்றும் இலங்கையில் வருடாந்தம் 106 டன் லஞ்ச் ஷீட்டுகளை பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கமைய 10 மில்லியனுக்கும் அதிகமான லன்ச்ஷீட்கள் நாளாந்தம் வீசப்படுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

விரைவில் உக்கக்கூடிய தன்மையுடைய லஞ்ச் ஷீட்டுகளை அறிமுகப்படுத்துவதாக பல நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அனைத்து வகையான லஞ்ச் ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (21) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Trending Posts